இப்படியும் ஒரு சாதனையா? வியப்பில் கோஹ்லியின் இரசிகர்கள்


அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இரண்டாவது ரி-ருவென்ரி போட்டியில், இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி ஓட்டமெதுவும் பெறாத நிலையில், ஆட்டமிழந்ததன் மூலம் புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

47 இனிங்சிஸ்களில் விளையாடியுள்ள விராட் கோஹ்லி, ரி-ருவென்ரி போட்டியில், ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழக்கும் முதல் சந்தர்ப்பமாக நேற்றைய ஆட்டமிழப்பு பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 85 ரி-ருவென்ரி போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய அணியின் தலைவர்களில் ஒருவர் ஓட்டமெதும் பெறாமல் ஆட்டமிழக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இரண்டாவது ரி-ருவென்ரி போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகளால் படுதோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments