மின்னல் வீரர் தோனிக்கே சோதனையா! - அவுட்டானாலும் அது சாதனை தான்!


குவஹாத்தி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் தோனி ஸ்டமிங் முறையில் அவுட்டானார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள், 3 டி20 போட்டியில் விளையாடி வருகின்றது. 4-1 என ஒரு நாள் போட்டியை இந்திய அணி கைப்பற்றியது.

தற்போது நடைப்பெற்று வரும் டி20போட்டியில் 2 போட்டிகள் முடிவில் 1-1 என இரு அணிகளும் சம நிலையில் உள்ளன.

தோனி அவுட் :

நேற்று நடந்த 2வது டி20 போட்டியில் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 8, கோலி 2, மணீஸ் பாண்டே 6, தவான் 2 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். தோனி ஸ்டம்பிங் அவுட் முறையில் அவுட்டானார்.

அப்போது களத்திற்கு வந்த மூத்த வீரர் தோனி, ஜாதவுடன் சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இருப்பினும் ஜம்பாவின் சுழலில் ஸ்டம்பிங் முறையில் தோனி அவுட்டாகி வெளியேறினார்.

தோனிக்கு இது முதல் முறை :
டி20 போட்டியில் ஸ்டம்பிங் முறையில் தோனி அவுட்டாவது இதுவே முதல் முறை. ஸ்டம்பிங் முறையில் மிகக் குறைந்த அளவே தோனி அவுட்டாகி உள்ளார்.
போட்டி எதிரணி
டி20 போட்டி (ஒரு முறை) ஆஸ்திரேலியா 2017
ஒருநாள் (ஒரு முறை) வெஸ்ட் இண்டீஸ் 2011
டெஸ்ட் போட்டி (3 முறை) பாகிஸ்தான் 2006,
தென் ஆப்ரிக்கா 2008,
வங்க தேசம் 2010

மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங்கை செய்து வரும் தோனி, தான் அந்த வலையில் விழுந்து விடாமல் தற்காப்புடன் விளையாடுவதில் வல்லவராக திகழ்ந்து வருகின்றார்.

Post a Comment

0 Comments