இந்திய அணி சிறப்பாக செயற்பட தோனி அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும்! – வெடிக்கும் சர்ச்சை


தோனியை அணியில் இருந்து நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு தினேஷ் கார்த்திக்கை தெரிவு செய்யும் போதுதான் இந்திய அணி சிறப்பானதாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் அவுஸ்ரேலிய அணிகள் மோதிக்கொண்ட இரண்டாவது ரி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.

அதனைத் தொடர்ந்து அடுத்த ரி20 போட்டியில் அவுஸ்ரேலியாவிற்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியில் இடம்பெற வேண்டிய வீரர்கள் குறித்து அஜித் அகர்கர் கருத்து வெளியிடும் போதே இதனைக் கூறியுள்ளார்.

மேலும், தோனியை விட தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடக்கூடியவர். தோனி இரண்டாவது போட்டியில் சரியாக விளையாடாத காரணத்தினால் மட்டும் இதனை நான் கூறவில்லை.

தோனியின் தற்போதைய நிலையினை விடவும் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயற்படக்கூடியவர். என்றாலும் விராட் கோஹ்லி தோனியை அணியில் இருந்து நீக்கமாட்டார் என்றே நான் நினைக்கின்றேன் எனவும் அஜித் அகர்கர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அஜித் அகர்கர் வெளியிட்டுள்ள இந்த சர்ச்சைக்குறிய கருத்தானது பல்வேறு விமர்சனங்களை அவருக்கு எதிராக எழுப்பியிருந்ததோடு பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் அவுஸ்ரேலியாவிற்கு எதிரான 3 ஆவது ரி20 போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதேவேளை, நியூசிலாந்து அணிக்கு எதிராக எதிராக 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒருநாள் போட்டித்தொடரில் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்க விடயமாகும்.

Post a Comment

0 Comments