டோனியின் வாழ்க்கையை விடுங்க..குணத்தை பாருங்க: நண்பர் உருக்கம்


டோனியின் வாழ்க்கையை பின்பற்றுவதை விட, அவர் குணத்தை பின்பற்றினால் வாழ்கையில் வெற்றி பெறலாம் என்று அவரின் நெருங்கிய நண்பர் அருண் பாண்டே கூறியுள்ளார்.

இந்திய அணிக்கு பல்வேறு சாதனைகளை தேடித் தந்தவர் டோனி. ஆனால் சமீபகாலமாக அவரின் துடுப்பாட்டம் மற்றும் ஓய்வு குறித்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் டோனியின் நெருங்கிய நண்பரும் மற்றும் விளம்பர ஒப்பந்த மேனேஜருமான அருண் பாண்டே, டோனியின் வாழ்க்கைப்பயணத்தை பின்பற்றுவது முட்டாள்தனமானது என்றும் அதில் வெறும் அவரின் கிரிக்கெட் மட்டும் தான் உள்ளது.

இன்னும் சிலர் அவர் பணத்திற்காகவே கிரிக்கெட் விளையாடுகிறார் என்று எண்ணுகின்றனர். குறிப்பிட்டு கூற வேண்டும் எனில் அவரின் குணம் தான், அவரை இந்த அளவிற்கு கொண்டு சென்றுள்ளது, அவரின் வாழ்க்கை பயணத்தை பின் பற்றுவதை விட, டோனியின் குணத்தை பின்பற்றினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments