இவரே முதல் வீரர்: கோஹ்லியின் சாதனையை தகர்த்தெறிந்தார் தென்னாபிரிக்க வீரர்


ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விரைவாக அதிக சதம் விளாசிய இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லியின் சாதனையை தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஹசிம் அம்லா தகர்த்தெறிந்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிம்பர்லி மைதானத்தில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கெதிராக போட்டியில் சதம் விளாசியதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் (26 சதங்கள்) அதிக சதம் விளாசிய கோஹ்லியின் சாதனையுடன் இணைந்தார்.

ஆனால் விராட் கோஹ்லி 166 இன்னிங்சில் 26 சதமே விளாசியிருந்தார். இதனை ஹசிம் அம்லா 157 போட்டிகளில் 154 இன்னிங்ஸ் முறியடித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் 247 இன்னிங்சில் 26 சதமும், ரிக்கி போண்டிங் 286 இன்னிங்சில் 26 சதமும் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments