நட்சத்திர பட்டாளத்தை பந்தாடியது இந்தியா கிரிக்கெட் அணி- இதிலும் டோனிதான் அரசன்!


பொலிவுட் நடிகர் அபிஷேக் பட்சனின் தொண்டு நிறுவனத்திற்காகவும், இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லியின் அறக்கட்டளைக்காகவும் நடத்தப்பட்ட கால்பந்து தொடரில், கோஹ்லி தலைமையிலான ஆல் ஹார்ட் அணி 7-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தொண்டு நிறுவனங்களுக்கு பண உதவி செய்யும் வகையில் நடத்தப்பட்ட இப்போட்டியில், கோஹ்லி தலைமையிலான விளையாட்டு வீரர்களின் அணிக்கு ‘ஆல் ஹார்ட் எஃப்.சி’ என்றும், பொலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் தலைமையிலான திரை நட்சத்திரங்களின் அணிக்கு ‘ஆல் ஸ்டார்ஸ் எஃப்.சி’ என்றும் பெயரிடப்பட்டிருந்தது.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், போட்டி தொடங்கிய 5வது நிமிடமே, ஆல் ஹார்ட் எஃப்சி அணியின் டோனி கோல் அடித்து இரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினார். தொடர்ந்து 39வது நிமிடத்தில் டோனி இரண்டாவது கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

இதனையடுத்து இப்போட்டியில் டோனி மற்றும் அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோர் தலா 2 கோல்களும், கோஹ்லி, கேதார் ஜாதவ், ஷிகர் தவான் உள்ளிட்டோர் தலா 1 கோலும் போட்டு அசத்தினர். ஆல் ஸ்டார்ஸ் எஃப்சி அணியில் ரன்பிர் கபூர், ஷபீர் ஆகியோர் கோல் அடித்தனர். இதற்கமைய போட்டியின் முடிவில் 7-3 என்ற கோல் கணக்கில் ஆல் ஹார்ட் அணி வெற்றிபெற்றது. இரண்டு கோல்கள் அடித்து அசத்திய டோனி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ஆல் ஹார்ட் எஃப்சி அணி விபரம்: டோனி, கோஹ்லி, கே.எல். ராகுல், கேதார் ஜாதவ், ஷிகர் தவான், அனிருதா ஸ்ரீகாந்த், உமேஷ் யாதவ், மணிஷ் பாண்டே, புவனேஷ்வர் குமார், ஷ்ரேயாஸ் அய்யர், யுஸ்வெந்திர சஹால், ஹர்திக் பாண்ட்யா, சாஹிர் கான், ஜஸ்பிரிட் பும்ரா, சுப்ரமணியம் பத்ரிநாத், பவன் நெகி, இந்தியா ஹொக்கி அணியின் முன்னாள் தலைவர் ஸ்ரீஜேஷ், டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

ஆல் ஸ்டார்ஸ் எஃப்சி அணி: அபிஷேக் பச்சன், ரன்பிர் கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா, டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், ஆதித்யாராய் கபூர், அர்ஜூன் கபூர், தினோ மோரியா, கார்த்திக் ஆர்யன், அர்மன் ஜெயின், ஷபிர் அலுவாலியா, நிஷாந்த் மேஹ்ரா, சச்சின் ஜோஷி, கரன் வீர் மேஹ்ரா, விக்ரம் தாபா, ரோஹன் ஷ்ரெஸ்தா, ஹர்பிரீத் பாவேஜா, ஷஷங் கைதான் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

Post a Comment

0 Comments