வெற்றியை பதிவுசெய்தாலும் மிக மோசமான சாதனையை படைத்த சென்னை அணி!

சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்ட பரபரப்பான ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி த்ரில் வெற்றியைப் பதிவு செய்துள்ள போதிலும் மிக மோசமான சாதனை ஒன்றையும் சென்னை படைத்துள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த போட்டியில் சென்னை அணி ஆரம்ப துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட போது முதல் 10 ஓவர்களுக்கு 54 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது, அத்தோடு 2 விக்கெட்டுகளையும் இழந்திருந்தது.

இதன்காரணமாக 11 ஆவது ஐ.பி.எல் தொடரில் முதல் பத்து ஓவர்களுக்கு பதிவுசெய்யப்பட்ட மிக மோசமான ஓட்ட எண்ணிக்கை இதுவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரையிலும் எந்த ஒரு அணியும் இவ்வாறான மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தவில்லை.

இதேவேளை, சன் சன்ரைசர்ஸ் அணியுடன் பலப்பரீட்சையில் ஈடுபட்ட சென்னை ஆரம்பத்தில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தாலும் ஒருவாறாக 182 ஓட்டங்களைக் குவித்தது.


ஆரம்பத்தில் மோசமாக ஆடியபோதிலும் அடுத்த பத்து ஓவர்களில் அதிரடி ஆட்டத்தினைக் காட்டி 182 ஓட்டங்களை சென்னை அணி குவித்திருந்ததமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

183 ஓட்டங்கள் வெற்றி என போராடிய சன்ரைசர்ஸ் அணி சென்னைக்கு பாரிய நெருக்கடியினைக் கொடுக்கும் வகையில் செயற்பட்டது. ஆட்டம் சூடுபிடித்திருந்த நிலையில் சென்னை அணிக்கு தோல்வியே என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

எனினும் கடைசி ஓவரில் 19 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ரஷித்கான் அபாரமாக ஆட இரு பந்துகளுக்கு 10 ஓட்டங்கள் சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்காக தேவைப்பட பரபரப்புடன் பிராவோ பந்து வீசினார்.

5 ஆவது பந்தை ரஷித் நான்கு ஓட்டங்களாக மாற்ற 1 பந்துக்கு 6 ஓட்டங்கள் என்ற பரபரப்பு கட்டத்தை நோக்கி போட்டி தள்ளப்பட்டது. எனினும் இறுதியில் 4 ஓட்ட வித்தியாசத்தில் சென்னை வெற்றியடைந்தமை குறிப்பிடத்தக்கது.