மைதானத்தில் பாகிஸ்தான் வீரரின் செயல்! – கிரிக்கெட் வரலாற்றில் ஓர் அதிர்ச்சி சம்பவம்!


இலங்கை எதிர் பாகிஸ்தான் மோதிக்கொள்ளும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து ஐந்து தடவையாக பந்து வீச ஓடிவந்தும் பந்தினை வீச முடியாமல் பாகிஸ்தான் வீரர் திணறிய சம்பவம் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த டெஸ்ட் போட்டியில், களத்தில் சிறப்பாக துடுப்பாடிக்கொண்டிருந்த கருணாரத்னவிற்கு எதிராக பாகிஸ்தான் வீரரான ரியாஸ் 111 ஆவது ஓவரினை வீச முன்வந்துள்ளார்.

இதன் போது நான்கு பந்துகளை வீசிய அவர் 5ஆவது பந்தினை வீசுவதற்காக வேகமாக ஓடி வந்த ரியாஸ் பந்து கையை விட்டு செல்லும் முன்னரே தடுமாறி நின்றுள்ளார்.

தொடர்ந்தும் அவர் ஐந்து முறைகள் இவ்வாறு நிலைதடுமாறி நின்று பின்னர் 6ஆவது தடவையாக ஒருவாறு பந்தினை வீசியுள்ளார்.

ரியாஸின் இத்தகைய செயல் சக பாகிஸ்தான் வீரர்களுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியதோடு, அணியின் பயிற்சிவிப்பாளர் மிக்கி ஆர்தரருக்கும் கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பந்தினை வீசுவதற்கு தொடர்ந்தும் இவ்வாறு தடுமாறி நின்ற செயல் இலங்கை வீரரரை எரிச்சல் மூட்டுவதற்காக செய்யப்பட்டதா? என்ற வகையில் ரியாஸிற்கு எதிராக பல்வேறு விமர்சங்களை எழுப்பியுள்ளது.

மேலும், கிரிக்கெட் வரலாற்றிலேயே இவ்வாறு நடைபெற்றது இதுவே முதற்தடவை எனவும் குறிப்பிடப்படுகின்றமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

இதேவேளை, அதிக தடவைகளை நோ பாலினை வீசய வீரராக ரியாஸ் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments