சிக்சர் மன்னனாக புதிய உலக சாதனைப் படைத்த இந்திய வீரர்!


தொடர்ந்து 5 வருடங்களாக 30 சிக்சர்களையும், அதற்கு மேற்பட்ட சிக்சர்களையும் வீளாசிய வீரர் என்ற புதிய உலக சாதனையினை இந்திய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ரோஹிட் சர்மா படைத்துள்ளார்.

அவுஸ்ரேலியாவிற்கு எதிராக அண்மையில் நடந்த ரி20 போட்டியின் போது சர்மா ஒரு நான்கு ஓட்டங்கள், ஒரு ஆறு ஓட்டங்கள் அடங்களாக 11 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இதில் அவர் அடித்த ஒரு சிக்சர் மூலம் இந்த வருடத்தில் 30 சிக்சர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் சர்மா இணைந்து கொண்டுள்ளார்.

அத்துடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து 5 வருடங்களாக 30 இற்கும் மேற்பட்ட சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற உலகசாதனையை சர்மா நிகழ்த்தியுள்ளார்.

இதற்கு முன்னர் தொடர்ந்து நான்கு வருடங்கள் 30 இற்கும் அதிக சிக்சர்கள் அடித்தவர்களாக நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் மற்றும் அவுஸ்ரேலியாவின் ஷேன் வாட்சன் ஆகியோர் சாதனைப் படைத்திருந்தனர்.

அத்துடன் விராட் கிரிஸ் கெய்ல், யுவராஜ் சிங், தோனி ஆகியோர் தொடர்ந்து மூன்று வருடங்கள் 30 இற்கும் அதிகமாக சிக்சர்களை அடித்தவர்களாக காணப்பட்டு வந்தனர்.

இவர்கள் அனைவரையும் பின்தள்ளிய சர்மா தற்போது சிக்சர் மன்னனாக புதிய சாதனையினை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments